செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 6 ஜனவரி 2021 (12:12 IST)

கடற்கரையில் சாகசம் செய்யும் அமலா பால் - ரசிகர்களை ஆச்சர்யப்படுத்திய புகைப்படம்!

நடிகை அமலா பால் சர்ஃபிங் செய்வது போல வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் மைனா படத்தில் சிறப்பாக நடித்து அதன் மூலம் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை மூன்று வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது. பின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மும்பையில் முகாமிட்டுள்ள அமலா பால் இப்போது சமுகவலைதளங்கள் மூலமாக தனது கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ந்து பதிவேற்றி ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார். இந்நிலையில் கடற்கரையில் சர்ஃபிங் செய்ய ஆயத்தமாகும் தனது புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.