ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 6 ஜனவரி 2021 (12:27 IST)

குடியால் தனது கேரியரை இழந்தாரா? ரசிகரின் கமெண்ட்டால் கடுப்பான மாதவன்!

நடிகர் மாதவன் தன் நடிப்பில் வெளியாக உள்ள மாறா திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

தமிழ் சினிமாவில் அலைபாயுதே திரைப்படம் மூலமாக அறிமுகமான மாதவன், சாக்லேட் பாயாக வலம் வந்தார். ஆனால் அதே நேரத்தில் தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களிலும் அவர் நடித்து வந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இதையடுத்து 2015 ஆம் ஆண்டு வெளியான இறுதிச் சுற்று திரைப்படம்தான் அவருக்கு மீண்டும் கம்பேக்காக அமைந்தது.

அதன் பின்னர் விக்ரம் வேதா உள்ளிட்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இப்போது அவர் நடிப்பில் மலையாள சார்லி திரைப்படம் மாறா என்ற பெயரில் உருவாகி அமேசான் ப்ரைமில் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் இப்போது அவர் ஈடுபட்டு வருகிறார். அப்போது ரசிகர் ஒருவர் ‘மாதவன் ஒரு காலத்தில் என் இதயத்துக்கு நெருக்கமானவராக இருந்தார். ஆனால் அவர் குடிக்கு அடிமையான பின்னர் அவரின் அற்புதமான சினிமா கேரியரை பாழாக்கி விட்டார்’ எனக் கூறியிருந்தார்.

அவருக்கு பதிலளித்த மாதவன் ‘ஓ நீங்கள் எனக்கு சிகிச்சை அளிக்கிறீர்களா… நான் உங்களின் பெற்றோருக்காக பரிதாபப்படுகிறேன். உங்களுக்கு மருத்துவ ஆலோசனை தேவை’ என அந்த ரசிகருக்கு பதிலளித்துள்ளார்.