திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 31 ஜனவரி 2024 (08:24 IST)

விமானத்தில் தான் குடித்தது என்ன? போலீஸில் புகாரளித்த மயங்க் அகர்வால்!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய டெஸ்ட் அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சிறப்பாக விளையாடி வந்தார் மயங்க் அகர்வால். அதே போல ஐபிஎல் தொடரில் அவர் சில சீசன்கள் பஞ்சாப் கிங்ஸ் அணியை வழிநடத்தியும் வந்தார். தற்போது சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்நிலையில் இப்போது உள்ளூர் தொடரான ரஞ்சிக் கோப்பையில் கர்நாடக அணிக்குக் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.  ரஞ்சி போட்டியில் விளையாடுவதற்காக அவர் திரிபுராவின் அகர்தலாவுக்கு விமானத்தில் சென்றுள்ளார்.

அப்போது அவர் இருக்கைக்கு முன்னால் வைக்கப்பட்டு இருந்த தண்ணீர் பாட்டிலில் இருந்து தண்ணீர் கொடுத்துள்ளார். அதன் பின்னர் அவர் வாய் மற்றும் வயிற்றில் எரிச்சலை உணர்ந்துள்ளார். விமானத்திலேயே வாந்தி எடுத்துள்ளார். இதையடுத்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, அகர்தலாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொண்டையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சோதனையில் தெரியவந்துள்ளது. ஐசியுவில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது அபாயகட்டத்தை தாண்டிவிட்டதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் மயங்க் அகர்வாலின் மேலாளர் அகர்தலா போலீஸ் ஸ்டேஷனில் ‘ விமானத்தில் மயங்க் அகர்வால் குடித்த பாட்டிலில் இருந்தது என்ன என விசாரிக்க வேண்டும்’ என புகார் அளித்துள்ளார்.