1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Mayank agarwal got sick in flight admitted in hospital

விமானத்தில் வாந்தி எடுத்த இந்திய கிரிக்கெட் வீரர்… ஐசியுவில் அனுமதி!

மயங்க் அகர்வால்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய டெஸ்ட் அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சிறப்பாக விளையாடி வந்தார் மயங்க் அகர்வால். அதே போல ஐபிஎல் தொடரில் அவர் சில சீசன்கள் பஞ்சாப் கிங்ஸ் அணியை வழிநடத்தியும் வந்தார். தற்போது சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்நிலையில் இப்போது உள்ளூர் தொடரான ரஞ்சிக் கோப்பையில் கர்நாடக அணிக்குக் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.  ரஞ்சி போட்டியில் விளையாடுவதற்காக அவர் திரிபுராவின் அகர்தலாவுக்கு விமானத்தில் சென்றுள்ளார்.

அப்போது விமானத்திலேயே வாந்தி எடுத்துள்ளார். இதையடுத்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, அகர்தலாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொண்டையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சோதனையில் தெரியவந்துள்ளது. ஐசியுவில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது அபாயகட்டத்தை தாண்டிவிட்டதாக சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
WWE-ன் RAW தொடருக்கான ஒளிபரப்பு உரிமையை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ்