திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 26 ஜனவரி 2024 (09:03 IST)

டோவினோ தாமஸின் ‘நடிகர் திலகம்’ என்ற டைட்டிலை மாற்ற வைத்த பிரபு!

தமிழில் மாரி உள்பட மலையாளத்தில் பல படங்களில் நடித்திருப்பவர் டோவினோ தாமஸ். அவர் நடித்த மின்னல் முரளி மற்றும் 2018 ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி படங்களாக அமைய தற்போது மலையாள சினிமாவின் முன்னணி நடிகராக உள்ளார்.

இவர் நடிப்பில் சமீபத்தில் ரிலீஸான தள்ளுமாலா மற்றும் 2018 ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. இந்நிலையில் இப்போது அவர் நடிகர் திலகம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல மலையாள நடிகரான லாலின் மகன் ஜூன் பால் லால் இயக்கி வருகிறார். இந்த படம் மே 3 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்நிலையில் இப்போது நடிகர் திலகம் என்ற டைட்டில் நடிகர் என்று மாற்றப்பட்டுள்ளது. இதற்கு நடிகர் பிரபுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது. இதுபற்றி பேசியுள்ள அவர் “இந்த டைட்டிலில் ஒரு படம் வரப் போவதாக சிலர் சொன்னார்கள். நான் நடிகர் லாலிடம் போன் செய்து இந்த படத்தின் டைட்டிலை மாற்ற முடியுமா எனக் கோரிக்கை வைத்தேன். அதை ஏற்றுக்கொண்ட அவர்கள் இப்போது டைட்டிலை மாற்றியுள்ளார்கள். நடிகர் திலகம் என்ற வார்த்தை சிவாஜி கணேசனின் ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமான வார்த்தை” எனக் கூறியுள்ளார்.