ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 20 நவம்பர் 2021 (16:53 IST)

விராட் கோலியை முந்திய மார்டின் குப்தில்!

நியுசிலாந்து அணியின் மார்டின் குப்தில் சர்வதேச டி 20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

நேற்று நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி 20 போட்டியில் மார்டின் கப்தில் 10 ரன்களை எடுத்த போது உலகின் அதிக டி 20 சர்வதேச ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை கப்தில் நிகழ்த்தினார். மார்டின் கப்டில் 111 டி20 போட்டிகளில் 3,248 ரன்கள் எடுத்து டி20 சர்வதேசப் போட்டியில் அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற பெருமையை எட்டினார். இவருக்கு அடுத்த இடத்தில் இந்திய வீரர் விராட் கோலி 95 போட்டிகளில் 3,227 ரன்களை எடுத்திருக்கிறார்.