ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 20 நவம்பர் 2021 (16:27 IST)

விஷால் ஆதிக் ரவிச்சந்திரன் படத்துக்கு வந்த சிக்கல்! எனிமி எதிரொலி!

விஷால் நடித்த எனிமி திரைப்படத்தை மினி ஸ்டுடியோஸ் சார்பாக வினோத்குமார் என்பவர் தயாரித்திருந்தார்.

விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் உருவான எனிமி திரைப்படத்தை மிக அதிக பொருட்செலவில் தயாரித்திருந்தார் மினி ஸ்டுடியோஸ் வினோத்குமார். இவர் நடிகர் தனுஷிடம் மேனேஜராக இருந்து அவரின் வுண்டர்பார் நிறுவனத்தை கவனித்து வந்தவர். தனியாக படம் தயாரிக்கும் ஆசையில் எனிமி படத்தை தயாரித்தார்.

இந்த படம் தீபாவளிக்கு அண்ணாத்த திரைப்படத்தோடு மோதியது. ஆனால் போதிய வரவேற்புக் கிடைக்கவில்லை. இதனால் படம் மோசமான வசூலை சந்தித்தது. இதன் மூலம் தயாரிப்பாளருக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டிருக்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் விஷால் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் இவர் தயாரிக்க இருந்த படத்தில் இருந்து பின் வாங்கப் போகிறார் என சொல்லப்படுகிறது. இதனால் அந்த படம் உருவாக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.