செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 19 ஏப்ரல் 2024 (12:50 IST)

ஹாட்ரிக் தோல்வியைத் தவிர்க்குமா லக்னோ? பலம்மிக்க சென்னை அணியோடு இன்று மோதல்!

ஐபிஎல் தொடர் பாதிக்கட்டத்தை தாண்டி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று லக்னோவில் நடக்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

பலம் மிக்க அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை ஆறு போட்டிகளில் விளையாடி நான்கில் வென்று இரண்டில் தோற்று புள்ளிப் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது. தோனிக்குப் பதிலாக கேப்டன் பொறுப்பேற்ற ருத்துராஜ் கெய்க்வாட் தோனியை போலவே மிகவும் கூலாக அணியை வழிநடத்தி செல்கிறார்.

ஆரம்பத்தில் சிறப்பாக தொடங்கிய லக்னோ அணி தற்போது தடுமாற ஆரம்பித்துள்ளது. கடந்த இரண்டு போட்டிகளில் படுதோல்வி அடைந்துள்ளது. இந்நிலையில் இன்று அதிலிருந்து மீளக் கடுமையாக போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.