ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 18 ஏப்ரல் 2024 (16:03 IST)

விக்கெட் பிடுங்க புது ப்ராடக்டை டீமில் இறக்கிய CSK..! – இனி அதிரடி ஆட்டம்தான் போல!

Richard Gleeson
ஐபிஎல் போட்டிகளில் அதிரடியாக விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது பவுலிங்கில் புது வீரரை களமிறக்குகிறது.



ஐபிஎல் போட்டிகள் தொடங்கி பரபரப்பாக நடந்து வரும் நிலையில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. தொடர்ந்து சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் அதிரடி காட்டி வந்தாலும், சமீபத்தில் பவுலர்களிடையே வீச்சு குறைந்துள்ளதாகவே தெரிகிறது.

இந்நிலையில் சென்னை அணியின் பவுலிங் யூனிட்டை வலுப்படுத்தும் வகையில் புதிய பந்து வீச்சாளரை களம் இறக்குகிறது சிஎஸ்கே நிர்வாகம். இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ரிச்சர் க்ளீசன் தான் அந்த புதிய ப்ளேயர். சென்னை அணியில் டெவான் கான்வேயின் இடத்தை க்ளீசன் நிரப்புவார் என சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


வலதுகை பேஸ் பவுலரான க்ளீசன் இதுவரை டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவரது முதல் டி20 போட்டியில் இந்தியாவை எதிர்கொண்டபோது ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரிசப் பண்டின் விக்கெட்டுகளை வீழ்த்தியவர். தற்போது தனது முதல் ஐபிஎல் போட்டிகளில் அவரது விளையாட்டு எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. நாளை லக்னோ அணியுடன் சென்னை அணி மோதும் போட்டியில் இவர் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K