தோனிக்கு இதுதான் கடைசி சீசனா… நெருங்கிய நண்பர் அளித்த பதில்!
ஐபிஎல் 2024 சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் சி எஸ் கே அணி மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த சீசனில் தோனி எட்டாவது வீரராக களமிறங்கிய அதிரடியாக விளையாடி வருகிறார். தற்போது 42 வயதாகும் தோனி இந்த சீசனின் வயதான கேப்டனாக உள்ளார். இந்நிலையில் இந்த சீசனோடு அவர் ஓய்வு பெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. கடந்த சீசனில் முழங்கால் பிரச்சனையால் அவதிப்பட்டார். அதனால் அவரால் அதிக நேரம் பேட் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது. எல்லா இன்னிங்ஸ்களிலும் கடைசி பேட்ஸ்மேனாக களமிறங்கினார்.
இந்நிலையில் தோனியின் நெருங்கிய நண்பரும் முன்னாள் சிஎஸ்கே வீரருமான சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். அதில் “தோனி 2025 ஆம் ஆண்டு சீசனில் விளையாடுவார்” என்று நம்பிக்கை அளிக்கும் விதமாக பேசியுள்ளார்.