செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 11 மார்ச் 2022 (16:31 IST)

என்னது மலிங்கா ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலா? அணி நிர்வாகம் பகிர்ந்த புகைப்படம்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் ஸ்டார் பவுலர்களில் ஒருவரான லசித் மலிங்க ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

டி20, ஒருநாள், டெஸ்ட் என அனைத்து வகை போட்டிகளிலும் ஓய்வு பெறுவதாக இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா  சமீபத்தில் அறிவித்துரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா தனது அபார பந்துவீச்சு காரணமாக உலகின் முன்னணி பேட்ஸ்மேன்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார் என்பதும் பேட்ஸ்மேன்களை தனது பந்துவீச்சால் திணறடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் தொடரில் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய அவர் ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் எடுத்த பவுலர்களில் ஒருவராக இப்போது வரை இருந்து வருகிறார். இப்போது ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுவிட்ட அவர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இது சம்மந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.