1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Krishmachari srikanth talked about players retirement issue

கிரிக்கெட் வீரர்கள் ஓய்வை அறிவிப்பதே இந்த பிரச்சனையால்தான்… ஸ்ரீகாந்த் கருத்து!

ஸ்ரீகாந்த்
தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த். இந்தியக் கிரிக்கெட்டில் அதிரடியான ஆட்டத்தைத் தொடங்கி வைத்தவர் என்று இவரை சொல்லலாம். 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற அணியில் இடம்பெற்றவர். இறுதிப் போட்டியில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் சேர்த்தவர்.

ஓய்வுக்குப் பிறகு தேர்வுக்குழு தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர் தற்போது வர்ணனையாளராகப் பணியாற்றி வருகிறார். ஸ்ரீகாந்த், தன்னுடையக் கருத்துகளை வெளிப்படையாக முன்வைப்பவர். அது சில நேரங்களில் சர்ச்சைகளை உருவாக்கவும் செய்யும்.

இந்நிலையில் இப்போது வீரர்கள் ஓய்வு முடிவு குறித்துப் பேசியுள்ளார். அதில் “ கிரிக்கெட் வீரர்கள் 36-37 வயதில் ஓய்வை அறிவிக்கக் காரணமே அவர்களுக்கு ஏற்படும் பார்வைக் குறைபாடு பிரச்சனை. பார்வையில் சிறிய அளவு குறைபாடு இருந்தாலும் பேட்டிங் செய்வது கடினம்.  பல வீரர்களின் ஓய்வுக்குக் காரணம் பார்வை குறைபாடுதான்” எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
ரோஹித் ஷர்மா ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும்… கங்குலி அறிவுரை!