தொடர்புடைய செய்திகள்
- மிட்செல் உள்ளே.. ரச்சின் வெளியே..! சிஎஸ்கே எடுத்த அதிரடி முடிவு! – டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் பந்து வீச்சு தேர்வு!
- இனிமே ஜெயிச்சும் பயனில்ல.. ஆனாலும் ஜெயிப்போம்! – குஜராத்தை 16 ஓவர்களில் வீழ்த்திய ஆர்சிபி!
- டாஸ் வென்ற பெங்களூரு எடுத்த முடிவு… கம்பேக் கொடுத்த மேக்ஸ்வெல்… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!
- பாயிண்ட்ஸ் குறைப்பாளரான ஆர்சிபி.. தப்பித்து மேலேறுமா குஜராத் டைட்டன்ஸ்! – இன்று RCB vs GT பலப்பரீட்சை!
- சேப்பாக்கத்தை அமைதிப்படுத்த ப்ளான் போடும் கம்மின்ஸ்? திரும்ப அடிக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ்? – இன்று SRH vs CSK மோதல்!
முத்துப் பாண்டியான ரஷீத் கானையே பொளந்து எடுத்து கில்லி வில் ஜாக்ஸ்… கோலியின் ரியாக்ஷன்!
நேற்று நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதிக் கொண்ட நிலையில் ஆர்சிபி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 200 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் சாய் சுதர்ஷன் 49 பந்துகளில் 84 ரன்களும், ஷாரூக்கான் 30 பந்துகளில் 58 ரன்களும் அடித்தனர்.
நேற்று நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதிக் கொண்ட நிலையில் ஆர்சிபி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 31 பந்துகளில் அரைசதம் அடித்த வில் ஜாக்ஸ், அடுத்த பந்துகளில் 50 ரன்கள் சேர்த்து 41 பந்துகளில் சதமடித்தார்.
டி 20 கிரிக்கெட் ஸ்பெஷலிஸ்ட் என சொல்லப்படும், பல ஜாம்பவான் வீரர்களே அடித்தாட பயப்படும் ரஷீத் கான் ஓவரில் 4 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைத்தார். ரஷீத் கான் ஓவரில் ஜாக்ஸ் இப்படி அடிப்பதை எதிர்முனையில் இருந்து பார்த்து ரசித்த கோலி தன்னுடைய ஆச்சர்யத்தை வெளிப்படுத்தினார். மேலும் கோலி போட்டி முடிந்ததும் பேசும்போது தான் பார்த்த மிகச்சிறந்த டி 20 இன்னிங்ஸ்களில் ஒன்று வில் ஜாக்ஸை பாராட்டியுள்ளார்.