வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 21 செப்டம்பர் 2023 (14:44 IST)

சச்சினின் இந்த சாதனையை மட்டும் கோலியால் முறியடிக்க முடியாது… மூத்தவீரரின் கருத்து!

கிரிக்கெட் உலகின் கடவுளாகக் கருதப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடிய அவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் பல எண்ணிக்கையற்ற சாதனைகளை படைத்துள்ளார். அதில் முக்கியமான ஒன்று சர்வதேச போட்டிகளில் 100 சதங்கள் என்ற சாதனை.

அந்த சாதனையை இந்திய கிரிக்கெட் தற்போதைய நட்சத்திர வீரர் விராட் கோலி, முறியடிக்க வாய்ப்புகள் அமைந்துள்ளன. தற்போது அவர் சர்வதேச போட்டிகளில் 77 சதங்கள் அடித்துள்ளார். அதில் ஒருநாள் போட்டிகளில் 47 சதங்களும், டெஸ்ட் போட்டிகளில் 29 சதங்களும் அடித்துள்ளார்.

ஒட்டுமொத்தமாக 100 சதங்கள் என்ற சாதனையை கோலி முறியடித்தாலும், டெஸ்ட் போட்டிகளில் 51 சதங்கள் என்ற சாதனையை முறியடிக்க முடியாது என முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார்.