செவ்வாய், 5 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 11 செப்டம்பர் 2023 (19:16 IST)

#Asia Cup -2023 : கோலி, கே.எல்.ராகுல் அதிரடி பேட்டிங்....பாகிஸ்தானுக்கு இமாலய இலக்கு

Pakistan- india match
ஆசிய கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, பாகிஸ்தானுக்கு 357 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்துள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி  முதலில்  பேட்டிங் செய்தது.

இதில் களமிறங்கிய நான்கு இந்திய பேட்ஸ்மேன்களில் ரோஹித் சர்மா 56 ரன்னும், சுப்மன் கில் 58 ரன்னும் அடித்து அவுட்டாகினர்.

இதையடுத்து களமிறங்கிய விராட் கோலி 122 ரன்னும், கே.எல்.ராகுல்  111 ரன்னும் அடித்தனர்.

எனவே இந்திய கிரிக்கெட் அணி 50 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் அடித்துள்ளது. பாகிஸ்தான் அணி சார்பில், அஃரிடி மற்றும் கான் இருவரும் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

357 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்யவுள்ளது.