வியாழன், 30 மார்ச் 2023
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated: திங்கள், 3 அக்டோபர் 2022 (09:03 IST)

“அது முக்கியமில்லை… நீ விளையாடு…” தினேஷ் கார்த்திக்கிடம் கோலி சைகை!

இந்திய அணியின் பேட்ஸ்மேன் கோலி நேற்று 49 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி மிக அபாரமாக வெற்றி பெற்றது. முதலில் ஆடிய 3 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து 238 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

இந்த போட்டியில் 20 ஆவது ஓவரில் தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடினார். அப்போது கோலி எதிர்முனையில் 49 ரன்களோடு இருந்தார். அதனால் அவருக்கு சிங்கள் எடுத்து ஸ்ட்ரைக் தரவா எனக் கோலியிடம் கேட்டார். ஆனால் கோலி “வேண்டாம். அடித்து ஆடு” என்று கூறி சைகை செய்தார். இது ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில் அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.