வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 24 ஏப்ரல் 2023 (15:03 IST)

கேட்ச் பிடிச்ச மகிழ்ச்சியை ப்ளையிங் முத்தம் கொடுத்து வெளிப்படுத்திய கோலி… வெட்கத்தில் சிவந்த அனுஷ்கா!

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான கோலி, கடந்த சில ஆண்டுகளாக பேட்டிங் ஃபார்மில் தடுமாறி வந்த நிலையில் இப்போது மீண்டும் தன்னுடைய அசுர பார்முக்கு திரும்பி சிறப்பாக விளையாடி வருகிறார்.

இந்நிலையில் இப்போது ஆர் சி பி அணியின் கேப்டன் பாஃப் டு பிளஸ்சிக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், கடந்த சில போட்டிகளாக அவர் அணியை தலைமையேற்று வழிநடத்துகிறார். இந்நிலையில் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் வீரர் ஜெய்ஸ்வாலின் கேட்ச்சை பிடித்த போது மகிழ்ச்சியை வெளிப்படுத்த அனுஷ்கா சர்மாவை நோக்கி பறக்கும் முத்தத்தை அனுப்பினார். அதைப் பார்த்த அனுஷ்கா சர்மா வெக்கத்தில் சிரிக்க, இந்த ரொமாண்டிக்கான காட்சியை மைதானத் தொலைக்காட்சியில் பார்த்த ரசிகர்கள் ஆர்ப்பரித்து கொண்டாடினர்.