தொடர்புடைய செய்திகள்
- டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களில் ஓய்வு பெறுகிறார் டூ ப்ளசிஸ்!
- உலகை ஆளும் இந்திய வம்சாவளியினர்! – அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட பட்டியல்!
- 20% வாகனங்களால் மட்டுமே பிரச்சனை: பாஸ்டேட் குறித்து நெடுஞ்சாலை ஆணை!
- வேகமாக குறைந்து வரும் கொரோனா பாதிப்புகள்! – இந்திய நிலவரம்!
- வாட் இஸ் வலிமை... அஸ்சினிடம் கேட்ட மொயின் அலி!
நடுவரிடம் ஆவேசமாக பேசிய விராட் கோலி! – நடவடிக்கை பாயுமா?
சென்னையில் நடந்த டெஸ்ட் மேட்ச்சில் நடுவரிடம் கேப்டன் விராட் கோலி ஆவேசமாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா – இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் சென்னையில் நடைபெற்ற நிலையில் அதில் இந்திய அணி வெற்றி பெற்றது. அந்த ஆட்டத்தின்போது ஜோ ரூட்டுக்கு அக்ஷர் படேல் வீசிய பந்து கால் காப்பில் பட்டு விலகியது. இதுதொடர்பான முடிவில் நடுவர்கள் நாட் அவுட் கொடுத்தது விராட் கோலியை கோபமடைய செய்தது.
இதனால் கோலி நடுவரான மேனனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. நடுவர்கள் எடுப்பதுதான் முடிவு என்றும் முடிவை மாற்ற சொல்லி கோலி கேட்பதும், அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும் ஒரு நல்ல கிரிக்கெட் வீரருக்கு அழக்கல்ல என்ற ரீதியில் பிசிசிஐ வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது. தொடர்ந்து கோலி இதுபோன்று வாக்குவாதங்களில் ஈடுபட்டால் அவர் மீது நடவடிக்கை பாயவும் வாய்ப்புள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்