தொடர்புடைய செய்திகள்
- சதமடித்து களத்தில் இருக்கும் டீன் எல்கர் .. தென்னாப்பிரிக்கா ஸ்கோர் எவ்வளவு?
- அரபிக் கடலுக்கு 3 போர்க் கப்பல்களை அனுப்பி வைத்த இந்தியா - எதற்காக தெரியுமா?
- கே.எல்.ராகுல் அபார சதம்.. இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் எவ்வளவு?
- ஆப்கானிஸ்தான் தொடரிலும் இடம்பெற மாட்டாரா ஹர்திக் பாண்ட்யா!
- இந்தியாவில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே மர்ம சத்தம்! – இஸ்ரேல் பயணிகளுக்கு எச்சரிக்கை!
பெய்ல்ஸ்-அ திருப்பி வச்சி மேஜிக் விக்கெட் எடுத்த கோலி…!
இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையே முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது சென்ச்சூரியன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 245 ரன்கள் எடுத்தது. இந்தியாவின் பின்வரிசை பேட்ஸ்மேன் கே எல் ராகுல் அபார சதம் அடித்தார்.
இதையடுத்து முதல் இன்னிங்சை ஆடிவரும் தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட்களை இழந்து 256 ரன்கள் சேர்த்துள்ளது. அந்த அணியின் டீன் எல்கர் சதமடித்து 140 ரன்களோடு ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். இந்த போட்டியில் விக்கெட்களை கைப்பற்ற இந்திய பவுலர்கள் தடுமாறி வருகின்றனர்.
இந்த இன்னிங்ஸில் விக்கெட்டே விழாமல் இருந்த போது கோலி 29 ஆவது ஓவரில் ஸ்டம்ப் அருகே சென்று பைல்ஸ்களை மாற்றி பொருத்தினார். அவர் அப்படி செய்த அடுத்த இரண்டு பந்துகளில் தென்னாப்பிரிக்க வீரர் டோனி டி ஜோர்ஸி தனது விக்கெட்டை பும்ரா பந்தில் பறிகொடுத்து வெளியேறினார். இதே போல சில மாதங்களுக்கு முன்னர் ஸ்டுவர்ட் பிராட் பெயில்ஸை மாற்றி மேஜிக் விக்கெட்டை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.