வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 28 டிசம்பர் 2023 (07:07 IST)

சதமடித்து களத்தில் இருக்கும் டீன் எல்கர் .. தென்னாப்பிரிக்கா ஸ்கோர் எவ்வளவு?

இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையே முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 245 ரன்கள் எடுத்தது. இந்தியாவின் கே எல் ராகுல் அபார சதம் அடித்தார். 
 
இதனை அடுத்து தென்னாபிரிக்க அணி பேட்டிங் செய்த நிலையில் அந்த அணியின் டீன் எல்கர் அபாரமாக சதம் அடித்து இன்னும் களத்தில் இருக்கிறார் என்பதும் 23 பவுண்டர்களுடன் 140 ரன்கள் அடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்தியாவின் பந்துவீச்சை பொறுத்தவரை  பும்ரா மற்றும் சிராஜ் தலா இரண்டு விக்கெட்டுகளையும் பிரசித் கிருஷ்ணா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.  
இரண்டாவது நாள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 66 ஓவர்ஜ்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் எடுத்துள்ளது என்பதும் இந்தியாவின் ஸ்கோரை விட  11 ரன்கள் அதிகம் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva