1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Hardhik pandya will miss afganisthan series

ஆப்கானிஸ்தான் தொடரிலும் இடம்பெற மாட்டாரா ஹர்திக் பாண்ட்யா!

வங்கதேசம்
உலகக் கோப்பை தொடரில் பங்களாதேஷுக்கு எதிரான போட்டியின் போது பந்துவீசிய ஹர்திக் பாண்ட்யா காலில் காயம் ஏற்பட்டு உடனடியாக மைதானத்தை விட்டு வெளியெறினார். இன்னும் அவர் காயத்தில் இருந்து மீளவில்லை. அதனால் உலகக் கோப்பை தொடரில் இருந்தே அவர் வெளியேறினார்.

இந்நிலையில் உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு நடக்க உள்ள ஆஸ்திரேலியா டி 20 தொடரிலும் அவர் இடம்பெறவில்லை. அதனால் அந்த டி 20 தொடருக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யா முழுவதுமாக காயத்தில் இருந்து குணமாக அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை ஆகும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடக்க உள்ள தொடரிலும் ஹர்திக் இடம்பெற மாட்டார் என சொல்லப்படுகிறது. அதனால் அவர் அடுத்த ஆண்டு ஏப்ரலில் நடக்கும் ஐபிஎல் தொடரில்தான் நேரடியாக களமிறங்குவார் என சொல்லப்படுகிறது.
 
அடுத்த கட்டுரையில்
ஷர்துல் தாக்கூரின் தலையில் தாக்கிய கோயிட்சியின் பந்து.. ஹெல்மெட் இருந்தும் வீக்கம்!