திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (18:13 IST)

கேஜிஃப் தயாரிப்பு நிறுவனத்துக்காக பஹத் ஃபாசில் நடிக்கும் பேன் இந்தியா திரைப்படம்!

கேஜிஎஃப் திரைப்படங்களின் மூலமாக இப்போது இந்தியா முழுவதும் அறியப்படும் தயாரிப்பு நிறுவனமாக மாறியுள்ளது.

நடிகர் யாஷ் நடித்த கேஜிஎப் மற்றும் கேஜிஎப் 2 ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய Hombale Films என்ற நிறுவனம் சுதா கொங்காரே இயக்கும் அடுத்த திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது . இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு எதுவும் இந்த அறிவிப்போடு வெளியாகவில்லை.

இந்நிலையில் இப்போது ஃபஹத் பாசில் மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடிக்கும் தூனம் என்ற படத்தை அறிவித்துள்ளது. இந்த படத்தை கன்னட சினிமாவின் பிரபல இயக்குனரான பவன் குமார் இயக்க உள்ளார். இதற்கான போஸ்டர் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.