செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth

கடந்த முறை கேதார் ஜாதவ் மாற்று வீரராக வந்த போது… அப்ப ஈ சாலா கப் நமதேதானா?

இந்த ஐபிஎல் சீசன் பல அதிசயங்களை நடத்தி வருகிறது. ரஹானே, முரளி விஜய் போன்ற ஃபீல்ட் அவுட் ஆகிவிட்டதாக கருதிய வீரர்கள் இந்த சீசனில் பல ரன்களை அடித்து ஆட்டத்தையே புரட்டிப் போட்டு வருகிறார்கள். இந்நிலையில் இப்போது ஆர் சி பி அணியில் காயம் காரணமாக விலகியுள்ள டேவிட் வில்லிக்கு பதில் கேதார் ஜாதவ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த முறை ஐபிஎல் ஏலத்தில் கேதார் ஜாதவ்வை எந்த அணியும் எடுக்காததால், ஜியோ சினிமாவில் மராத்தி மொழி வர்ணனையாளராக பணியாற்றினார். இந்த நிலையில்தான் அவரை ஆர் சி பி அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

2018 ஆம் ஆண்டு அப்போது சி எஸ் கே அணிக்காக விளையாடிய வில்லிக்கு பதில் கேதார் ஜாதவ் களமிறக்கப்பட்டார். அந்த ஆண்டு சி எஸ் கே அணி கோப்பையை வென்றது. அதே போல இந்த ஆண்டு ஆர் சி பி அணியால் எடுக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு ஆர் சி பி அணி கோப்பையை வெல்லும் அதிர்ஷட்த்தை நம்பும் ரசிகர்கள் கருத்து தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்.