1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 27 மே 2024 (18:38 IST)

ஊரே நம்மள பத்திதான் பேசுது.. ரொம்ப நன்றி! – சன்ரைசர்ஸ் வீரர்களிடம் பேசிய காவ்யா மாறன்!

Kavya Maran
நேற்றைய ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் அணி படுதோல்வி அடைந்த நிலையில் அணி வீரர்களிடம் அணி உரிமையாளர் காவ்யா மாறன் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.



இந்த சீசன் ஐபிஎல் போட்டியில் ஆரம்பம் முதலே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அற்புதமாக விளையாடி வந்தது. பேட் கம்மின்ஸின் கேப்பிட்டன்சியும், ட்ராவிஸ் ஹெட் உள்ளிட்டோரின் அதிரடி ஆட்டமும் சன்ரைசர்ஸ் அணியை இறுதி போட்டி வரை கொண்டு சென்றது. ஆனால் நேற்று நடந்த இறுதி போட்டியில் சன்ரைசர்ஸ் அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்து கொல்கத்தா அணியிடம் தோல்வியை தழுவியது.

ஒவ்வொரு சன்ரைசர்ஸ் போட்டியிலும் அணி வீரர்கள் வெல்லும்போது கைதட்டி, துள்ளி குதித்து உற்சாகமான அணி உரிமையாளர் காவ்யா மாறன் நேற்றைய போட்டியின் படுதோல்வியால் கண்ணீர் சிந்திய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்நிலையில் தற்போது காவ்யா மாறன் சன்ரைசர்ஸ் வீரர்களிடம் பேசும் வீடியோவை சன்ரைசர்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.


அதில் பேசிய காவ்யா மாறன், ப்ளேயர்கள் இத்தனை போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி இறுதி சுற்று வரை வந்ததே சிறப்பான விஷயம் என்றும், வீரர்களின் அற்புதமான விளையாட்டால் தான் பெருமைக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் கொல்கத்தா அணி உள்பட ஊர் முழுவதும் சன்ரைசர்ஸ் பற்றிய பேச்சு நிலவுவதாகவும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K