1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Karnataka govt announced eekalaivaa award to K L rahul

கே எல் ராகுலுக்கு ஏகலைவா விருது – கர்நாடக அரசு அறிவிப்பு!

கே எல் ராகுல்
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவரான கே எல் ராகுலுக்கு ஏகலைவா விருது அறிவித்துள்ளது கர்நாடக மாநில அரசு.

இந்திய அணியில் மூன்று விதமான போட்டிகளிலும் தனது திறமையை நிருபித்துக் காட்டியுள்ளார் கே எல் ராகுல். அதையடுத்து தற்போது நடந்துவரும் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில் அவரை கௌரவிக்கும் பொருட்டு விளையாட்டு துறையில் சாதிப்பவர்களுக்கு அளிக்கப்படும் ஏகலைவா விருதை அறிவித்துள்ளது கர்நாடக அரசு. இதற்கு நன்றி தெரிவித்துள்ள கே எல் ராகுல் ‘மாநில அரசுக்கு நன்றி. இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் செயல்படுவேன். இந்த விருது எனக்குக் கிடைக்க எனது குடும்பத்தினர், பயிற்சியாளர் மற்றும் நண்பர்களே காரணம்’ எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
பாட்மிண்ட்டன் வீராங்கை பி வி சிந்து ஓய்வா ? அறிவிப்பால் அதிர்ச்சியான ரசிகர்கள்!