ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: புதன், 7 ஆகஸ்ட் 2024 (11:03 IST)

மோடியை விமர்சித்தும் வினேஷுக்கு ஒலிம்பிக்கில் விளையாட வாய்ப்புக் கிடைத்தது- கங்கனா பதிவு!

பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இறுதி போட்டிக்கு சென்றுள்ள மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்திற்கு இந்தியா முழுவதுமிருந்த வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. ஆனால் இந்திய பிரதமர் மோடி அவருக்கு இன்னும் வாழ்த்து சொல்லவில்லை.

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக வினேஷ் போகத் இந்திய மல்யுத்த சம்மௌனத்தின் தலைவராக இருந்த பாஜக பிரபலம் மீது பாலியல் புகார்கள் அளித்ததோடு, தலைவர் பொறுப்பில் உள்ளவரை மாற்ற வேண்டும் என சக மல்யுத்த வீரர்களோடு சுமார் 40 நாட்களாக போராட்டமும் நடத்தி வந்தார். இந்த போராட்டத்தின் போது அவர் பல அடக்குமுறைகளை எதிர்கொண்டார் அப்போது அவர் மோடியையும் விமர்சித்துப் பேசினார்.

இந்நிலையில் இப்போது பாஜக எம் பியான கங்கனா ரனாவத்தின் சமூகவலைதளப் பதிவில் “இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தைக் காண பதற்றமாக இருக்கிறேன்.  வினேஷ் போகத் தன்னுடைய போராட்டத்தின் ஒரு கட்டத்தில் பிரதமர் மோடியையும் விமர்சித்து பேசியிருந்தார். இருந்த போதும் அவர் ஒலிம்பிக்கில் விளையாட அனுப்பப்பட்டார். அவருக்கு சிறப்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதுதான் ஜனநாயகம் மற்றும் சிறந்த தலைவரின் அழகு” எனப் பதிவிட்டுள்ளார்.