செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 5 அக்டோபர் 2023 (15:29 IST)

போட்டோவுக்கு போஸ் குடுத்துட்டு போனவர்தான்.. விளையாட வராத கேன் வில்லியம்சன்! – என்ன காரணம்?

இன்று உலகக்கோப்பை ஒருநாள் போட்டிகள் தொடங்கி நடந்து வரும் நிலையில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் அணியில் இல்லாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.



2023 ஆம் ஆண்டிற்கான ஐசிசி உலகக்கோப்பை ஒருநாள் போட்டிகள் இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கி உள்ளது. இந்த முதல் நாள் போட்டியில் இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.

ஆனால் நியூசிலாந்து அணியின் முக்கியமான கிரிக்கெட் வீரரும் கேப்டனுமான கேன் வில்லியம்சனின் விளையாடும் அணிகளில் இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாக டொம் லதம் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். கேன் வில்லியம்ஸன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக இந்த அணிகளில் இடம்பெறவில்லை என கூறப்படுகிறது.

கடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் டைடன்ஸ் அணிக்காக விளையாடிய கேன் வில்லியம்சன் காயமடைந்ததும் பின்னர் அதிலிருந்து மீண்டு வந்து தற்போது உலகக்கோப்பை தொடரில் விளையாடுவதும் குறிப்பிடத்தக்கது.

Edit by Prasanth.K