1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 16 நவம்பர் 2021 (12:37 IST)

இப்போ போறேன்… ஆனா திரும்ப வருவேன்..! – இந்தியாவுக்கு எதிரான டி20ல் கேன் வில்லியம்சன் விலகல்!

இந்தியா – நியூஸிலாந்து இடையேயான டி20 தொடரிலிருந்து கேன் வில்லியம்சன் விலகுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியா – நியூஸிலாந்து இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி 20 தொடர் நாளை தொடங்கி நடைபெற உள்ளது. இந்தியாவில் நடைபெறும் இந்த போட்டிகளுக்காக நியூஸிலாந்து அணி வீரர்கள் இந்தியா வந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த தொடருக்கு கேன் வில்லியம்சன் கேப்டனாக இருப்பார் என எதிர்பார்த்த நிலையில் டி20 தொடரிலிருந்து கேன் வில்லியம்சன் விலகுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. டெஸ்ட் தொடருக்கு தயாராவதால் டி20 தொடரில் அவர் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.