1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. K L rahul talked about rohith Sharma re joining

இரண்டாவது டெஸ்ட்டிலாவது விளையாடுவாரா ரோஹித் ஷர்மா? – கே எல் ராகுல் தகவல்!

கே எல் ராகுல்
வங்கதேசத்துக்கு எதிராக நாளை நடக்க உள்ள முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் ஷர்மா விளையாட மாட்டார்.

இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ளது. இந்த போட்டியில் கேப்டன் ரோஹித் ஷர்மா காயம் காரணமாக விலகியுள்ளதால், கே எல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் போட்டிக்கு முன்பாக பேசிய அவர் “இங்கிலாந்து அணி போல நாங்களும் ஆக்ரோஷமாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவோம்” எனக் கூறியிருந்தார்.

மேலும் பேசிய அவர் “ரோஹித் ஷர்மாவை ஒரு கேட்னாகவும் பேட்ஸ்மேனாகவும் இழந்துள்ளோம். அவர் முழு உடல் தகுதி அடைந்து இரண்டாவது டெஸ்ட்டுக்கு முன்னர் அணியில் இணைவார் என எதிர்பார்க்கிறோம்” எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
மெஸ்சி கோப்பையை வென்றால் மகிழ்ச்சி! – ரொனால்டோ கருத்து!