வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 9 அக்டோபர் 2023 (16:29 IST)

மீண்டும் பாஜக ஆட்சி தான்.. இந்தியா கூட்டணி படுதோல்வி அடையும்.. இந்தியா டிவி - CNX கருத்துக்கணிப்பு..!

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்றும் இந்தியா கூட்டணி படுதோல்வி அடையும் என்றும் இந்தியா டிவி மற்றும் CNX கருத்து அனுப்பி தெரிவித்துள்ளது.

இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் சற்றுமுன் வெளியாகி உள்ள நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி உத்தரப்பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், கர்நாடகா, குஜராத், ராஜஸ்தான்,  மத்திய பிரதேசம், ஒடிசா,  அசாம்,  டெல்லி, உத்தரகாண்ட், வடகிழக்கு மாநிலங்கள்  ஆகிய மாநிலங்களில் அபார வெற்றி பெறும் என்றும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 315 தொகுதிகள் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்தியா கூட்டணிக்கு 172 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் என்றும் இந்த கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக கூட்டணி 32 இடங்களிலும், அதிமுக கூட்டணி ஆறு இடங்களில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஒரு இடமும் கிடைக்கும் என்றும் இந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Edited by Siva