1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 30 அக்டோபர் 2024 (16:55 IST)

அக்டோபர் மாதம் ‘இந்துக்களின் பாரம்பரிய மாதம்’: ஆஸ்திரேலியா அறிவிப்பு

australia pm
அக்டோபர் மாதம் என்பது இந்துக்களின் பாரம்பரிய மாதம் என ஆஸ்திரேலியா அரசு நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளது. 
 
அக்டோபர் மாதத்தில் நவராத்திரி, தசரா, தீபாவளி உள்ளிட்ட முக்கிய இந்து பண்டிகைகள் கொண்டாடப்படும் நிலையில், ஆஸ்திரேலியாவில் உள்ள நாடாளுமன்றத்தில் இப்படியான ஒரு அறிவிப்பு வெளியாகியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
 
 ஆஸ்திரேலிய நாட்டின் கட்டமைப்பில் இந்துக்களின் பங்கு அதிகமாக இருக்கிறது என்றும், பழமை வாய்ந்த இந்து மத சம்பிரதாயங்களுக்கு ஆஸ்திரேலியா அரசு மதிப்பளிக்கின்றது என்றும் நாடாளுமன்றத்தில் அறிக்கை வாசிக்கப்பட்டது. 
 
இந்த அறிவிப்பின் மூலம் ஆஸ்திரேலியாவில் உள்ள இந்து மக்கள் தங்கள் கலாச்சார பழக்க வழக்கங்களை கொண்டாடலாம் என்றும் அக்டோபர் மாதம் என்பது அனுபவ ரீதியான கொண்டாட்ட மாதம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், இந்த மாதத்தில் ஆஸ்திரேலியா முழுவதும் நடனம், இசை விழா உள்ளிட்ட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படும் என்றும், இந்து மத கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் இந்து கோயில்களில் பண்டிகைகள் விசேஷமாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
Edited by Mahendran