தொடர்புடைய செய்திகள்
- கடைசி டெஸ்ட் போட்டியில் மைல்கல் சாதனையை எட்டிய ஆண்டர்சன்!
- இலங்கை தொடரிலும் இந்திய மும்மூர்த்திகளுக்கு ஓய்வு… கேப்டன் யார்?
- இந்தியாவில் இருந்து விலகி நிரந்தரமாக லண்டனில் செட்டில் ஆகவுள்ளாரா கோலி?
- அழுதுவிடாமல் பந்துவீச வேண்டும் என்பதுதான் என் ஆசையாக உள்ளது- ஓய்வு குறித்து ஆண்டர்சன் நெகிழ்ச்சி!
- ஜெய் ஷாவுக்காக மைதானத்தை மாற்றாதீர்கள்… மும்பை ரசிகர்களின் செய்தி அதுதான் – ஆதித்யா தாக்கரே கருத்து!
கேரி சோபர்ஸ், ஜாக் காலிஸ் போன்ற லெஜண்ட்களின் சாதனையை சமன் செய்த பென் ஸ்டோக்ஸ்!
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஒரு நாள் போட்டியில் இருந்து ஒய்வு பெறுவதாக சில ஆண்டுகளுக்கு முன்னால் அறிவித்தார். ஆனால் அதன் பின்னர் ஓய்வு முடிவில் இருந்து பின் வாங்கி நடந்து முடிந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் கம்பேக் கொடுத்தர். ஆனால் அந்த தொடரில் அவரால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.
அதனால் அவர் சமீபத்தில் நடந்து முடிந்த டி 20 உலகக் கோப்பையிலும் விளையாடவில்லை. டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்துவதற்காக அவர் இந்த முடிவை எடுத்ததாகக் கூறினார். இந்நிலையில் இப்போது அவர் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியை வழிநடத்தி வருகிறார்.
இந்நிலையில் இந்த போட்டியில் அவர் முக்கியமான மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 6000 ரன்கள் மற்றும் 200 விக்கெட்கள் என்ற மைல்கல் சாதனையை பென் ஸ்டோக்ஸ் எட்டியுள்ளார். இதற்கு முன்னர் இந்த சாதனையை சர் கேரி சோபர்ஸ் மற்றும் ஜாக் காலிஸ் ஆகிய இரு ஜாம்பவான்கள் மட்டுமே எட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்