வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 12 ஜூலை 2024 (16:21 IST)

க்ரவுண்ட் எதுக்கு.. இங்கயே பாத்துக்கலாம்!? கலவரத்தில் இறங்கிய டச்சு - இங்கிலீஷ் ரசிகர்கள்! - வைரல் வீடியோ!

Football fans fight

ஈரோ உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் நெதர்லாந்து - இங்கிலாந்து அணிகள் மோதிக் கொண்ட நிலையில் மைதானத்திற்கு வெளியே ரசிகர்கள் கலவரத்தில் இறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய ரசிகர்களுக்கு உயிர்மூச்சான விளையாட்டாக கிரிக்கெட் இருப்பது போல, ஐரோப்பியர்களுக்கு விருப்பமான விளையாட்டாக கால்பந்து போட்டிகள் இருந்து வருகிறது. தற்போது நடந்து வரும் ஈரோ உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளால் ஐரோப்பிய நாடுகளே விழாக்கோலம் பூண்டுள்ளது. 

இந்நிலையில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள ஈரோ உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று அரையிறுதி போட்டியில் நெதர்லாந்து - இங்கிலாந்து அணிகள் மோதிக் கொண்டன. இதில் இங்கிலாந்து அணி 1-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. இது டச்சு (நெதர்லாந்து) ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
 

ஆனால் இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே டச்சு - இங்கிலீஷ் ரசிகர்கள் இடையே மோதல் தொடங்கி விட்டது. போட்டிக்காக கூட்டம் கூட்டமாக சென்ற டச்சு ரசிகர்களுக்கும், பார் ஒன்றின் அருகே அமர்ந்திருந்த இங்கிலாந்து ரசிகர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் இருவரும் மோதிக்கொண்டதில் பாரின் டேபிள், சேர்கள், டிவி உள்ளிட்டவற்றை ரசிகர்கள் அடித்து நொறுக்கியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Edit by Prasanth.K