ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 19 ஜூன் 2023 (08:22 IST)

பால் டேம்பரிங் செய்தாரா மொயின் அலி… 25 சதவீதம் அபராதம் விதித்தது ஏன்?

இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ரி எண்ட்ரி கொடுத்துள்ளார் மொயின் அலி. நடந்து வரும் அஷஸ் தொடரில் இங்கிலாந்து அணிக்காக விளையாடி வரும் அவருக்கு ஐசிசி விதிகளை மீறிய காரணத்துக்காக போட்டிக் கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் பந்துவீசும் போது மொயின் அலி, கையில் வியர்வை வராமல் இருக்க ஸ்ப்ரேவை பயன்படுத்தியுள்ளார். இதனால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டு மேலும் ஒரு மைனஸ் புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.

கையில் ஸ்ப்ரே அடித்தது பந்தை சேதப்படுத்துவதின் கீழ் வராது என்றாலும், நடுவர்களின் அனுமதி இல்லாமல் ஸ்ப்ரே பயன்படுத்திய காரணத்துக்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.