புதன், 18 செப்டம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 18 ஆகஸ்ட் 2024 (08:04 IST)

காசு திரும்ப தர முடியாது? இனி இந்த போட்டிகள் இந்தியாவில் கிடையாது! - ஜெய்ஷா எடுத்த அதிரடி முடிவு!

டெஸ்ட் போட்டிகளை சுவாரஸ்யமாக்க பகல்-இரவு போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் இனி இந்தியாவில் பகல்-இரவு போட்டிகள் நடக்காது என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா கூறியுள்ளார்.

 

 

டெஸ்ட் போட்டிகளில் சுவாரஸ்யத்தை அதிகரிக்கவும், ரசிகர்களை மைதானங்களுக்கு வரவழைக்கவும் 2012ம் ஆண்டில் தொடர் பகல்-இரவு ஆட்டங்களை ஐசிசி அறிமுகப்படுத்தியது. எனினும் இந்திய அணி இதுவரை 4 முறை மட்டுமே பகல் - இரவு போட்டிகளில் பங்கேற்றது. அதில் இந்தியாவில் 3 போட்டிகள் நடைபெற்றன.

 

ஆனால் இந்த பகல் - இரவு போட்டிகள் 5 நாட்களுக்கு திட்டமிடப்பட்ட நிலையில் 3 நாட்களுக்குள்ளே முடிவடைந்தன. இதனால் இந்தியாவில் பகல் - இரவு போட்டிகளை நடத்தப்போவதில்லை என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா முடிவு செய்துள்ளார்.

 

இதுகுறித்து பேசிய அவர், பகல் - இரவு போட்டிகளுக்கு ரசிகர்கள் 5 நாட்களுக்கும் சேர்த்தே டிக்கெட் வாங்குவதாகவும், ஆனால் போட்டிகள் குறைந்த நாட்களிலேயே முடிந்து விட்டால் மீத நாட்களுக்கான பணத்தை ரசிகர்களுக்கு திரும்ப தர இயலாது என்றும், அதனால் ரசிகர்கள் உடனான நல்லுறவை பேண இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.

 

Edit by Prasanth.K