செவ்வாய், 21 மார்ச் 2023
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated: புதன், 16 நவம்பர் 2022 (08:33 IST)

எல்லாம் சுகமே… ஜடேஜா போட்ட பதிவு… குஷியான சி எஸ் கே ரசிகர்கள்!

சென்னை அணியில் மீண்டும் இணைந்தது குறித்து ஜடேஜா எல்லாம் சுகமே என பதிவிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் முதல் சில போட்டிகளில் கேப்டனாக ஜடேஜா பணிபுரிந்தார் என்பதும் அவரது கேப்டன்ஷிப் திருப்தி இல்லாததால் மீண்டும் தோனி கேப்டன் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஜடேஜா அதிருப்தியில் இருந்ததாகவும், அவர் சிஎஸ்கே அணியில் இருந்து விலகுவார் என்று கூறப்பட்டது. மேலும் அவரது சமூக வலைத்தளத்தில் சிஎஸ்கே சம்பந்தப்பட்ட பதிவுகள் அனைத்தும் டெலிட் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

இதனால் ஜடேஜா, அடுத்த சீசனில் சென்னை அணிக்காக விளையாட மாட்டார் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது ஜடேஜா சென்னை அணியால் தக்கவைக்கப்பட்டுள்ளார். இதற்கு தோனியின் அழுத்தம்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் நேற்று தக்கவைக்க பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்ட பின்னர் ஜடேஜா “எல்லாம் சுகமே” என பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இது சி எஸ் கே ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தியாக அமைந்துள்ளது.