1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Jadeja wife may participate in gujarath election

குஜராத் தேர்தலில் போட்டியிடுகிறாரா ஜடேஜா மனைவி?

குஜராத்
இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஜடேஜா தற்போது காயம் காரணமாக உலக்கோப்பை தொடரில் விளையாடவில்லை.

இந்திய அணிக்காக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடி வருபவர் ரவிந்தர ஜடேஜா. மூன்று வடிவ போட்டிகளிலும் சிறப்பான பங்களிப்பை அளித்து வரும் ஐபிஎல் போட்டிகளிலும் சென்னை அணிக்காக விளையாடி கடந்த ஆண்டு அந்த அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

அரசியல் தரப்பில் பாஜக ஆதரவாளராக ஜடேஜா தன்னை வெளிப்படுத்திக் கொண்டு வருகிறார். இந்நிலையில் வரும் குஜராத் சட்டசபைத் தேர்தலில் ஜடேஜாவின் மனைவி ரிவாபா, பாஜக சார்பாக போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்த கட்டுரையில்
இந்திய அணியில் மாற்றம் இருக்குமா?... அரையிறுதியில் யாருக்கெல்லாம் வாய்ப்பு!