1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 27 ஜனவரி 2023 (09:11 IST)

ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட்.. பவுலிங்கில் அசத்திய ஜடேஜா!

ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட்.. பவுலிங்கில் அசத்திய ஜடேஜா!
ஜடேஜா உடல் தகுதியை நிரூபிப்பதற்காக இப்போது ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த ஆசியக் கோப்பை தொடரில் விளையாடிய ஜடேஜா அதன் பின்னர் காயம் காரணமாக விளையாடவில்லை. அறுவை சிகிச்சை செய்துகொண்ட அவர் இப்போது மீண்டும் உடல்தகுதியைப் பெற்று வருகிறார்.

இந்நிலையில் பிப்ரவரி மாதம் நடக்க உள்ள ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான அணியில் அவர் பெயர் இடம்பெற்றுள்ளது. கடந்த நான்கு மாதங்களாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாத அவரை உள்ளூர் போட்டிகளில் விளையாடி உடல்தகுதியை நிருபிக்குமாறு பிசிசிஐ உத்தரவிட்ட நிலையில் இப்போது சென்னையில் நடந்து வரும் ரஞ்சிக் கோப்பை போட்டியில் சவுராஸ்டிரா அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்த போட்டியில் பேட்டிங்கில் 15 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தாலும், பவுலிங்கில் 7 விக்கெட்களைக் கைப்பற்றி அசத்தினார். விரைவில ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் நடக்க உள்ள நிலையில் ஜடேஜா அணியில் முக்கிய வீரராக இருப்பார் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.