வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 6 மார்ச் 2024 (19:56 IST)

ISPL T-10 கிரிக்கெட் தொடர் தொடக்க விழா ! டான்ஸ் ஆடிய சச்சின்

sachin dance
மும்பையில் இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் தொடரின் தொடக்க விழா இன்று நடைபெற்றது.
 
மும்பையில் இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் (ஐ.எஸ்.பி.எல்) என்ற உள்ளூர் கிரிக்கெட் தொடர் இவ்வருடம் முதல் நடைபெறவுள்ளது.
 
10 ஓவர்கள் கொண்ட இந்த கிரிக்கெட் தொடரின் தொடக்க விழா, மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று  நடைபெற்றது.
 
இதில், சினிமா பிரபலங்கள், விளையாடு நட்சத்திரங்கள், முன்னாள் வீரர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டர். இந்த  நிகழ்ச்சியில் ஒலிபரப்பான ஆஸ்கர் விருது வென்ற நாட்டு நாட்டு என்ற பாடலுக்கு  சூர்யா, அக்சய்குமார், ராம் சரண் ஆகியோருடன் சச்சினும் நடனமாடினார்.இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
 
இன்றைய முதல் போட்டியில் அக்சய்குமாரின் ஸ்ரீநகர் அணியும், அமிதாப் பச்சனின் மும்பை அணியும் மோதுகின்றன.

சென்னை சிங்கம்ஸ் அணியின் உரிமையாளர் நடிகர் சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது.