1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 2 மார்ச் 2024 (19:50 IST)

நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு நிச்சயதார்த்தம்..

valarakashmi -Nicholai sachdev
நடிகை வரலட்சுமி, மும்யைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரன நிகோலய் சஸ்தேவ் என்பவரை திருமணம்  செய்யவுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகை வரலட்சுமி சரத்குமார்.  இவர் சிம்புவின் போடா போடி என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பின்னர், தாரைதப்பட்டை, விக்ரம் வேதா, சண்ட கோழி 2, சர்கார், மாரி 2, இரவின் நியழ் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார்.
 
சமீபத்தில் இவர் தெலுங்கில், ஹனுமன என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது தனுஷ் இயக்கி நடிக்கும் ராயன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
 
இந் நிலையில், நடிகை வரலட்சுமி, மும்யைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரன நிகோலய் சஸ்தேவ் என்பவரை திருமணம்  செய்யவுள்ளார்.
 
மும்பையில் இவர்கள் இருவருக்கும் நேற்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களின் திருமணம் பற்றிய தேதி விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.