தொடர்புடைய செய்திகள்
- அப்ப ஈசால கப் நம்தேதானா?… RCB அணிக்கு வருகிறாரா ஹர்திக்?
- அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை திருட்டு-போலீசார் தீவிர விசாரணை!
- வீரர்களை திட்டியதால் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சூர்யகுமார் யாதவ்… இது எப்ப?
- இலங்கைக்கு எதிரான முதல் டி 20 ஆட்டம்… இந்திய அணியில் ஆடப்போகும் ப்ளேயிங் 11 என்ன?
- சொந்த அணியின் ரசிகர்களே திட்டினால் என்ன செய்யமுடியும்?- ஹர்திக் குறித்து பும்ரா!
பிரபல பாடகியுடன் டேட்டிங்கில் இருக்கிறாரா ஹர்திக் பாண்ட்யா?
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஹர்திக் பாண்டியாவுக்கும், நடிகை நடாஷாவுக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்துக்கு முன்பே இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் அவர்களுக்கு அகஸ்தியா என்ற மகன் பிறந்தார்.
மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த பாண்ட்யா- நடாஷா திருமண வாழ்வில் சில மாதங்களுக்கு முன்னர் விரிசல் எழுந்தது. ஹர்திக்கும் நடாஷாவும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக விவாகரத்தை அறிவித்தனர்.
நடாஷா தனது மகனோடு செர்பியாவுக்கு சென்றுவிட்ட நிலையில் ஹர்திக் இப்போது பிரிட்டனைச் சேர்ந்த பாடகியான ஜாஸ்மின் வாலியாவை டேட் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் இருவரும் ஒரே நட்சத்திர ஹோட்டலின் நீச்சல் குளத்தருகே எடுத்துக் கொண்டு வெளியிட்ட புகைபடங்கள் இந்த ஊகத்தை கிளப்பியுள்ளன. மேலும் ஒருவருக்கொருவர் சமூகவலைதளங்களில் பின் தொடர ஆரம்பித்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்