1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Is dhawan cricket carrier finishing

முடிவுக்கு வருகிறதா ஷிகார் தவானின் கிரிக்கெட் வாழ்க்கை?

இந்தியா
ஷிகார் தவான் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இடம்பெறவில்லை என்பது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

இந்திய அணி ஜனவரி மாதம் இலங்கைக்கு எதிராக விளையாடும் டி 20 தொடரில் இந்திய அணிக்குக் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் மூத்த வீரர்கள் பலருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் கோலி, ரோஹித் ஷர்மா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் இடம்பெறவில்லை.

இந்நிலையில் ஒருநாள் அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஷிகார் தவான் இடம்பெறவில்லை. தொடர்ந்து சீரான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி வரும் நிலையில் புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கு இஷான் கிஷான் சமீபத்தில் சிறப்பாக விளையாடியது காரணமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

ஏற்கனவே டெஸ்ட் மற்றும் டி 20 போட்டிகளில் தவான் இடம்பெறுவதில்லை. இந்நிலையில் இப்போது ஒரு நாள் போட்டிகளிலும் அவர் இடம்பெறாததால், அவரின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
“என்னை ஏன் ஏலத்தில் யாருமே எடுக்கவில்லை என தெரியவில்லை” – சந்தீப் ஷர்மா புலம்பல்!