2036ம் ஆண்டின் ஒலிம்பிக்கை குஜராத்தில் நடத்த திட்டம்: மத்திய அரசு தகவல்
2036ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் அதற்கான அனுமதி கிடைத்தால் குஜராத்தில் பெரும்பாலான போட்டிகள் நடத்தப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை பாரிசில் நடக்க இருக்கும் நிலையில் 2028ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவிலும் 2032 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் 2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் இதற்காக 2023 ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற இருக்கும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் ஒப்புதல் கேட்க உள்ளதாகவும் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராத் தாகூர் தெரிவித்துள்ளார்.
இதற்கான திட்ட அறிக்கைகளை தயார் செய்து ஒப்படைக்க உள்ளதாகவும் இந்த திட்டம் சாத்தியமானால் குஜராத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும் என்றும் அமைச்சர் அனுராத் தாகூர் தெரிவித்துள்ளார்.
Edited by Mahendran