ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: செவ்வாய், 30 ஜூலை 2024 (11:08 IST)

2025 ஆம் ஆசியக் கோப்பை டி 20 ஃபார்மட்டாக நடக்கும்… இந்தியா நடத்தும்- வெளியான அறிவிப்பு!

ஆசியக் கிரிக்கெட் அணிகளுக்கான ஆசியக் கோப்பை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடந்து வருகிறது. கடந்த முறை பாகிஸ்தான் மற்றும் அமீரகத்தில் நடத்தப்பட்டது.

இந்நிலையில் 2025 ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை தொடர் டி 20 பார்மட்டில் நடக்க உள்ளதாக ஆசியக் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. மேலும் அந்த தொடரை இந்தியா நடத்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2027 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கோப்பை தொடர் ஒருநாள் வடிவில் இலங்கையில் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.