1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 21 மே 2024 (12:01 IST)

ஐபிஎல் ப்ளே ஆஃபில் KKR vs SRH… குவாலிஃபையர் போட்டியில் வெற்றி யாருக்கு?

கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேல் நடந்த ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் முடிந்து கொல்கத்தா, ஐதராபாத், ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்றுள்ளன.

இந்நிலையில் பைனலுக்கு நேரடியாக செல்வதற்கான குவாலிஃபையர் போட்டி  ஒன்று அகமதாபாத்தில் நடக்கிறது. இந்த போட்டியில் புள்ளிப் பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் கொல்கத்தா மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளும் சமபலம் கொண்ட அணிகள். இரு அணிகளுமே பேட்டிங்கில் இந்த சீசனில் எதிரணியினரை பயம் கொள்ள செய்தனர். அதுபோல இரு அணிகளும் திறமையான பவுலர்களைக் கொண்டுள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் பில் சால்ட் இங்கிலாந்து திரும்பியதும், சுனில் நரேன் காயத்தால் அவதிப்படுவதும் அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.