1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 22 மார்ச் 2024 (17:39 IST)

அந்த அணிதான் ஐபிஎல் கோப்பை வெல்லும்- டி வில்லியர்ஸ் நம்பிக்கை

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பை வெல்லும் என அந்த அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ்  நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 
ஐபிஎல் கிரிக்கெட் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் நடந்து வருகிறது. நடப்பு ஆண்டிற்காக ஐபில் போட்டி இன்று முதல் வரும் மே 26 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தி ; இன்றிரவு 8 மணிக்கு நடக்கும்  இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன், பெங்களூரு அணி மோதவுள்ளது.
 
 நடப்பு ஐபிஎல் -2024 தொடரில் மகளிர் ஐபிஎல் தொடரில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான பெங்களூரு அணி கோப்பை வென்று சாதனை படைத்தது.
 
எனவே ஆண்கள் அணியும் இம்முறை கோப்பை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில் அந்த அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் ஆர்.சிபி கோப்பை வெல்லும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் சமீபத்திய பேட்டியில்,''விளையாட்டு ஒரு வேடிக்கையான விஷயம். ஆர்.சி.பி இம்முறை கோப்பை வெல்ல முடியும் என நம்புகிறேன். ஆண்கள் ஆர்.சி.பி அணி ஒருமுறை கோப்பையை வென்றால் இன்னும் பல வெற்றிகள் கிடைக்கும்'' என்று கூறினார்.
 
மேலும், ''ஆர்.சி.பியை தவிர்த்து மேலும் சில அணிகள் கோப்பை வெல்லாமல் உள்ளன. அவர்கள் இம்முறை சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்துவர்.  நாங்கள் 3 முறை கோப்பை வெல்ல முடியாமல் தோல்வியுற்றோம். எங்களுக்கு வாய்ப்புகள் ருந்தபோதும் அதை தவறவிட்டோம்; அதற்கு எங்கள் மீதுதான் குறைகூற வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.