1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 7 ஏப்ரல் 2025 (07:21 IST)

ஓய்வு பற்றி பரவும் தகவல்கள்… தோனி சொல்வது என்ன?

ஓய்வு பற்றி பரவும் தகவல்கள்… தோனி சொல்வது என்ன?
கடந்த சில ஆண்டுகளாக சி எஸ் கே அணி ரசிகர்களைப் பொறுத்தவரை அணி வெற்றி பெறுகிறதோ இல்லையோ, தோனி கடைசியாக ஒரு சிக்ஸர் அடித்து விட்டால் ‘பைசா வசூல்’ எனக் கொண்டாடி மகிழ்ந்தனர். ஆனால் இந்த சீசனில் தோனிதான் தோல்விகளுக்குக் காரணமாக இருக்கிறார் என்று சொல்லுமளவுக்கு ஆதங்கத்தில் உள்ளனர்.

ஏனென்றால் வெற்றி பெற வேண்டிய போட்டிகளைக் கூட சி எஸ் கே அணித் தோற்று வருகிறது. அந்த போட்டிகளில் தோனி களத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தொடரின் நடுவிலேயே தோனி ஒய்வை அறிவிக்கவுள்ளார் என்று தகவல்கள் பரவியுள்ளன.

இந்நிலையில் ஓய்வு பற்றி தோனி விளக்கமாக பதிலளித்துள்ளார்.அதில் “நான் இப்பொது ஓய்வு அறிவிக்கப் போவதில்லை. எனக்கு இப்போது 43 வயதாகிறது. அடுத்த சீசனின் போது 44 வயதாகும். அதனால் நான் இன்னும் அதுபற்றி சிந்திக்க 10 மாதங்கள் உள்ளன. அதனால் என்னுடைய ஓய்வு பற்றி அறிவிக்க என்னுடைய உடல்தகுதிதான் முக்கியக் காரணியாக இருக்கும்”எனக் கூறியுள்ளார்.