பஞ்சாப் கிங்ஸ் லெவன்- கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் மழை குறுக்கீடு
பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியில் கொல்கத்தா அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
எனவே பஞ்சாப் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்த நிலையில், அந்த அணியின் பரமிஸ்ம்ரான் 23 ரன்களும், தவான் 40 ரன்களும், ராஜபக்சே 50 ரன்களும்,சர்மா 21 ரன்களும், கரண் 26 ரன்களும் எடுத்தனர். 20 ஓவர் முடிவில் இந்த அணி 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து, கொல்கத்தா அணிக்கு 192 ரன்கள் வெற்றி இலக்கான நிர்ணயித்துள்ளது.
கொல்கத்தா அணி சார்பில், உமேஷ் யாதவ் , சுனில் , சக்ரவர்த்தி தலா 1 விக்கெட் கைப்பற்றினர். டிம் சவுத்திரி 2 விக்கெட்டுகள் வீழ்தினார்.
இதையடுத்து 192 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியில், மந்தீப் சிங். குர்பாஸ் ஆகியோர் தொட்டக் ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
இதில், மந்தீப் 2 ரன், அனுகூல் ராய் 4 ரன், குப்ராஸ் 22 ரன்களுடன் அவுட்டாகினர். இதையடுத்து வந்த ராணா 22 ரன்கள், ரிங்கு சிங் 4 ரன், ரஸல் 35 ரன்கள், வெங்கடேஷ் அய்யர் 35 ரனகள் எடுத்தபோது அவுட்டாகினர்.
கொல்கத்தா அணி 16 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தபோது, மழை பெய்ததால், ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
மழை நின்றபின் ஆட்டம் மீண்டும் தொடங்கப்படும் என்றும், தொடர்ந்து மழை பெய்தால் டக்வொர்த் லீவிஸ் முறையில் கடைப்பிடிக்கப்படும் என்று கூறப்படுகிறது.