1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 17 ஏப்ரல் 2023 (21:33 IST)

ஐபிஎல்-2023: கான்வே- டூபே அதிரடி ஆட்டம்... பெங்களூர் அணிக்கு இமாலய வெற்றி இலக்கு!

chennai kings
சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

இன்றைய போட்டியில்  டாஸ்  வென்ற  பெங்களூரு அணி கேப்டன் டூ பிளஸ்சிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.,

எனவே தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  முதலில் பேட்டிங் செய்தது.  இதில்,  தொடக்க வீரர் ருதுராஜ் 3 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தாலும், கான்வே அதிரடியாக விளையாடி 45 பந்துகளில் 83  ரன்களும், ரஹானே 20 பந்துகளில் 37ரன்களும், டூபே 27 பந்துகளில் 52 ரன்களும்ம் அடித்தனர்,

20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 226 ரன்கள் அடித்து, பெங்களூர் அணிக்கு 227 ரன்  வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

மேலும், பெங்களூர் அணி சார்பில், சிராஜ், பார்மெல், விஜய்குமார், மேக்ஸ்வெல், ஹசங்கரா, படேல் ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.