வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 17 ஏப்ரல் 2023 (16:21 IST)

மாரியம்மன் கோவிலில் மகேந்திர சிங் தோனி! – ஐபிஎல் லைவ் போடும் கிராமம்!

IPL Live
ஐபிஎல் போட்டிகள் தொடங்கி பரபரப்பாக நடந்து வரும் நிலையில் மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஐபிஎல் லைவ் ஒளிபரப்பு என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது ட்ரெண்டாகி வருகிறது.

ஐபிஎல் தொடரின் 16வது சீசன் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. ஐபிஎல் வந்துவிட்டாலே சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு தயாராகி விடுவார்கள். தோனியின் சிக்ஸர்களை காண்பதற்காகவே சேப்பாக்கம் மைதானத்தில் தவமிருப்பவர்கள் தனி லிஸ்ட். ஐபிஎல் சீசனை மேலும் பிரபலப்படுத்தும் வகையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் முக்கிய நகரங்களில் மக்கள் திரளாக வந்து ஐபிஎல் பார்த்து கொண்டாடும் வகையில் பிரம்மாண்ட எல்இடி திரையில் ஐபிஎல் லைவ் ஒளிபரப்புகிறார்கள்.

முன்னரெல்லாம் கிராமங்களில் கோவில் திருவிழாக்கள் நடந்தால் திருவிழா அன்று இரவு பெரிய திரை கட்டி பக்திப் படங்கள் போடுவார்கள். இப்போது கிராம திருவிழாக்களும் கூட ஐபிஎல்லுக்கு அப்டேட் ஆகி விட்டனர் போலும். வேட்டைக்காரன் இருப்பு என்ற கிராமத்தில் நடைபெறும் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் இன்று இரவு பிரம்மாண்ட திரையில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மோதும் கிரிக்கெட் மேட்ச்சை ஒளிபரப்ப உள்ளதாக அப்பகுதியினர் வெளியிட்டுள்ள போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

மாரியம்மன் கோவிலில் மகேந்திர சிங் தோனியின் சிக்ஸரை பார்த்து குதூகலிக்க உள்ள ரசிகர்களுக்கு வாழ்த்துக்கள் என கூறி பலரும் இந்த போஸ்டரை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Edit by Prasanth.K